News March 26, 2025

குடும்ப ஐஸ்வர்யம் பெற அற்புத கோவில்

image

தி.மலை மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் கோவில் உள்ளது. இத்தலத்தில் ராமர் அமர்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இங்கு வந்து வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றிற்காகவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 7, 2025

தி.மலை: கேட்கும் செல்வத்தை அள்ளித்தரும் பெருமாள் கோயில்

image

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

தி.மலை: இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க

image

சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.

News August 7, 2025

தி.மலை: ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தேசிய குடற்புழு நீக்க நாள் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட உள்ளது. அதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 18 ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!