News January 8, 2026
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம்

முகையூர் ஒன்றியம் முகையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி இன்று (ஜன.08) வழங்கினார்.
Similar News
News February 11, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 11, 2026
திண்டிவனத்தில் பரிதாப பலி!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிக்காஷ் தெவரி(28). இவர், திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்றி இரவு, தண்ணீர் கேன் வாங்கிக் கொண்டு பாதிரி பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது., அந்த வழியாக வந்த பைக், பிக்காஷ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News February 11, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் கோட்ட விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் வரும் பிப்.18ஆம் தேதி காலை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் இந்தல் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், கண்டாச்சிபுரம் தாலுக்கா விவசாயிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


