News April 19, 2024
குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் வைத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Similar News
News August 18, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.21 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
BREAKING தூத்துக்குடியில் 17,200 பேருக்கு வேலை வாய்ப்பு

தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. அதன்படி அல்லிக்குளம், இராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் 1967 ஏக்கரில் ரூ.677 கோடியில் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதனால் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 3 மாதத்திகுள் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 18, 2025
தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிப்காட் பூங்கா

இன்று (18.8.2025) வெளியான அறிவிப்பில், சிங்கப்பூரின் ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் ரூ.4,953 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆதரவுடன் 1,967 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட்டிற்கு புதிய தொழில் பூங்கா, ரூ.667 கோடி முதலீட்டையும் 17,200 வேலைவாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. தென் தமிழ்நாட்டிற்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.