News December 12, 2025

குடியுரிமைக்காக USA-ல் பிரசவம்: இனி ‘நோ’ விசா!

image

USA-வில், அங்கே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் உள்ளது. எனவே, பிரசவத்தின் போது வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் USA செல்வதால், டிரம்ப் இதை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதன் மீது, USA SC கோர்ட் முடிவெடுக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் USA தூதரகம், குடியுரிமைக்காக குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், நிராகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Similar News

News December 19, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

ஒரு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சட்ட விரோத செயலாகும். எனவே சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

DMK தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம்: அண்ணாமலை

image

<<18602926>>திமுக தீய சக்தி<<>> என்பதை MGR, ஜெயலலிதா எல்லாம் எப்போதோ சொல்லிவிட்டார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேட்டியளித்த அவர், சினிமா பிரபலம், அரசியல் தலைவர்கள் சொல்வதை விட, சாதாரண மக்கள் கூட திமுகவை தீய சக்தி என்று தான் கூறுவதாகவும், அது தான் முக்கியம் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த கருத்து 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிலும் எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

News December 19, 2025

டி20 WC அணியின் லிஸ்ட் ரெடி!

image

டி20 WC அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் வழக்கம் போல் சூர்யா கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் இருக்கவே 100% வாய்ப்புள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடும் வீரர்களில் ஒருவர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இஷான், ரிங்கு, பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தெரிகிறது.

error: Content is protected !!