News December 17, 2025

குடியாத்தம் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

image

குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாளை டிச.18 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சுபலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 26, 2026

வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 26, 2026

வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

வேலூர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கலெக்டர்

image

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, கலந்து கொண்டார். இதில் வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!