News April 5, 2024
குடியாத்தம் அருகே ரயில் மோதி முதியவர் பலி

குடியாத்தம் அருகே அலங்காநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 81). இவர் இன்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
திருப்பத்தூர் SP அதிரடி; ஒரே நபரிடம் ரூ.26,00,000!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் நேற்று (09.02.2026) “முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் ₹26,00,000/- தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தனர்.
News February 10, 2026
வாணியம்பாடியில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (பிப்.9) தனது வீட்டு அருகே வாணியம்பாடி ரயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


