News January 24, 2026

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா

image

குடியாத்தம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழா திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களோடு, அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கின்றனர் என ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 6, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

image

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் – 2030, கருத்துகேட்பு கூட்டம் இன்று (பிப்.6) நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 6, 2026

வேலூர்: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News February 6, 2026

வேலூருக்கு புதிய SP நியமனம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை SP ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் சிவராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்.6) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!