News January 21, 2026
குடியாத்தம் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.21) குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பரதராமி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா.மற்றும் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News January 27, 2026
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
வேலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு; APPLY NOW!

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.
News January 27, 2026
வேலூர்: பாட்டியிடம் தங்கத்தை உருவிய கில்லாடி!

காட்பாடியை சேர்ந்தவர் ராஜம்மாள் (64). இவரிடம் அரசு ஓய்வு ஊதியத்தை அதிகப்படுத்தி தருகிறேன் என கூறி போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 6 கிராம் தங்க நகையை கழட்டுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட தேவமகேஷை (43) கைது செய்தனர்.


