News November 27, 2024
குடியாத்தத்தில் வேலை வாய்ப்பு முகாம்

வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், குடியாத்தம் தரணம்பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் (30.11.2024) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளனர்.
Similar News
News August 25, 2025
பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்

காட்பாடி, குகையநல்லூர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிக்கு அலுமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 25, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17509672>>தொடர்ச்சி)<<>>