News April 9, 2025
குடியாத்தத்தில் தனியார் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சார்பில், வரும் 11ஆம் தேதி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Similar News
News April 23, 2025
குழந்தை பாக்கியம் அருளும் ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

வேலூர், மேல்வல்லத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம். இலகிய மலையின் மேல் அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் சிவபெருமான் கால்பதித்து லிங்கமாகக் காட்சி அருள்பாலிக்கிறார். திருமணமாகி வெகு நாள்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டித் தொட்டில் கட்டி வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.ஷேர் பண்ணுங்க
News April 23, 2025
’தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் சிறை’

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அணைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சங்கங்கள் தமிழ் பெயா் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

வேலூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’<