News January 10, 2026

குடியரசு தின விழாவுக்காக 1,275 கிலோ போன்லெஸ் சிக்கன்

image

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்புக்காக முப்படைகளும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் தயாராகி வருகின்றன. அதனுடன் 1,275 கிலோவுக்கும் அதிகமான போன்லெஸ் சிக்கனும் தயாராகிறது. ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். விமான சாகசத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பருந்துகளுக்கான உணவாக இந்த சிக்கனை வனத்துறை, IAF உடன் இணைந்து விருந்தளிக்கவுள்ளது. இது எப்படி இருக்கு?

Similar News

News February 8, 2026

மாரடைப்பு வரும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவை தவறு. தினசரி நாம் கடைப்பிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பை உண்டாக்குகின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க. ஹெல்தியா இருங்க!

News February 8, 2026

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

image

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.

News February 8, 2026

இரவு தூங்கும்போது உடல் வலி ஏற்படுகிறதா? எச்சரிக்கை

image

இரவு நேரத்தில் ஏற்படும் உடல் வலி, பெரும்பாலும் தசைப்பிடிப்பு அல்லது மூட்டுத் தேய்மானத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். பகலில் வேலை, சத்தம் என கவனம் சிதறடிக்கப்படுவதால் வலி தெரிவதில்லை. இரவு படுக்கையில் அந்த வலியை கடுமையாக உணர முடிகிறது. எரிச்சல் அல்லது ஊசியால் குத்துவது போன்ற வலியின் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இது தொடர்ச்சியாக ஏற்பட்டால் டாக்டரை அணுகுவது அவசியம்.

error: Content is protected !!