News January 26, 2026
குடியரசு தினம்- அரியலூரில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்

இந்திய திருநாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதான புறாவினை பறக்கவிட்டு, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 27, 2026
விக்கிரமங்கலம்: மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சாத்தம்பாடி பகுதிகளில், இன்று மாட்டுவண்டிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்று படுகையில் வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர், ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதால், காவல்துறையினர் மாட்டு வண்டி பறிமுதல் செய்து அவர் தேடி வருகின்றனர்.
News January 27, 2026
அரியலூர்: கடன் நீக்கும் தையல்நாகி அம்மன்!

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 27, 2026
அரியலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

அரியலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.


