News January 1, 2026

குடியரசு தினத்தில் கால்நடைகள் அணிவகுப்பு!

image

இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 2026 குடியரசு தின அணிவகுப்பில் கால்நடைகளின் அணிவகுப்பு இடம்பெற உள்ளது. இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவின் (RVC) சார்பில் 2 ஒட்டகங்கள், 4 குதிரைகள் மற்றும் வேட்டையாடும் பறவைகள், 10 இந்திய இன நாய்கள், ஏற்கனவே சேவையில் உள்ள 6 வழக்கமான நாய்கள் அணிவகுப்பு நடத்த உள்ளன. நாட்டின் பாதுகாப்பில் கால்நடைகளின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெறும்.

Similar News

News January 1, 2026

ஹேப்பி நியூ இயர் சொன்ன ‘தல’ தோனி!

image

ரிட்டயராகி 7 ஆண்டுகள் கடந்த பின்னரும், கிரிக்கெட் என்றால் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ‘தல’ தோனி. அவரின் ஒவ்வொரு போட்டோவும் சோஷியல் மீடியாவை அதிரவைத்து விடுகிறது. அந்த வகையில் தனது குடும்பத்தினருடன் அவர் நியூ இயர் கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது. தலையில் தொப்பி வைத்தபடி இருக்கும் தோனியை பார்த்த நெட்டிசன்கள், ‘இது Pookie தல’ என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News January 1, 2026

பொங்கல் பரிசு ₹5,000.. போஸ்டர் TRENDING

image

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்து <<18726279>>TN அரசு அரசாணை<<>> வெளியிட்டுள்ளது. அதில், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு கொள்முதல் செய்வதற்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரொக்கம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ₹5,000 வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவை தற்போது SM-ல் வைரலாகி வருகின்றன.

News January 1, 2026

தினமும் 1 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

image

முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதச் சத்துகள் உள்ளன. எனவே 1 மாதத்திற்கு தினமும் ஒரு முட்டை வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ➤மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ➤முடி வளர்ச்சிக்கு உதவும் ➤சருமம் பளபளப்பாகும் ➤எடையை சீராக பராமரிக்க உதவும் ➤இதயம் ஆரோக்கியமடையும் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் 2026-ல் ஆரோக்கியமாக இருக்க SHARE THIS.

error: Content is protected !!