News December 24, 2024

குடிமை பொருள் துறை அமைச்சர் கிறிஸ்மஸ் வாழ்த்து

image

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் வாழ்த்துச் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் விண்ணின் வெளிச்சம்! மண்ணின் விருட்சம்! மனிதம் மலர! மானிடன் போற்ற! அன்பை மட்டுமே விதைத்து சென்ற இறைமகன் இயேசு பிரான் பிறந்த இத்திருநாளில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன். இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 24, 2024

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைமகன் இயேசு என்றும் நம்மோடு இருக்கிறார். என் பாதையை இந்த பண்டிகை உணர்த்துகிறது. இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் குழந்தை இயேசுவின் அன்பும் அருளும் ஆசீர்வாதம் என்றும் கிடைப்பதாக அமையட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

கட்டாயத் தேர்ச்சி ரத்து: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

image

மத்திய அரசைப் பின்பற்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பெரும்பாலும் சிபிஎஸ்இ கல்வி முறை பின்பற்றப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

காரைக்காலில் வேளாண்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது இன்று காரைக்கால் காமராஜர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் காட்டுப் பன்றியானது புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து நாசப்படுத்துகின்றது.