News August 11, 2025
குடிமனைப் பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

மயிலம் அருகே தி.கேணிப்பட்டு கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்ற நத்தம் புறம்போக்கு நிலம் இருக்கின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கண்ட இடத்தில் தான் இம்மக்கள் வசித்து வந்ததாக குறிப்பிடுகின்றனர் இந்த இடத்தில் குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென பட்டியல் சமூகத்தினர் மக்கள் இன்று (ஆக11) மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .
Similar News
News August 12, 2025
பயனாளிகளுக்கு நில உடைமைக்கான ஆவணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கூட்டத்தில், தாட்கோ சார்பில், நன்நிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு நில உரிமைக்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஆக.11) வழங்கினார். உடன் தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.
News August 11, 2025
முன்னாள் படைவீரர்கள் மூன்று சக்கர வாகனம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
News August 11, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்டு 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.