News March 20, 2025
குடிமங்கலத்தில் சூதாடிய மூன்று பேர் கைது

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
Similar News
News March 23, 2025
திருப்பூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News March 23, 2025
உடுமலை: உணவகத்தில் 24 மணி நேரம் மது விற்பனை

திருப்பூர் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உணவகத்தில் 24 மணி நேரமும் முறைகேடாக மதுக்கடை அமைத்து மது விற்பனை நடைபெற்று வருகின்றது. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் அர்பன் வங்கி அனுஷம் திரையரங்கம் பின்புறம் பஸ் நிலையம் ராஜேந்திர ரோடு பகுதியில் பேரணி முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
News March 23, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு மார்ச் 12 முதல் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுநிலை தகுதி, மருத்துவ தகுதி நிலை, உடற்தகுதி நிலை, விதிமுறைகள், நிபந்தனைகள், இணையதள விண்ணப்பங்கள் நிரப்புவதற்கான மற்றும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு பற்றி விரிவான தகவல்களை www.joinindianarmy.nic.in இணையத்தில் பதிவுசெய்ய என திருப்பூர் கலெக்டர் அழைப்புவிடுத்துள்ளார்.