News July 3, 2024
குடிநீர் தொட்டியில் மலம்? நேரில் அதிகாரிகள் ஆய்வு

கோத்தகிரி கோடநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம தலைவர் மணிகண்டன் மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
Similar News
News August 17, 2025
வெலிங்டன் மருத்துவமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம்

குன்னூர் அருகே கோவை கேஜி மருத்துவமனை மற்றும் வெலிங்டன் கண்ட்டோன்மென்ட் மருத்துவமனை இணைந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதயம், எலும்பு, வெரிகோஸ்வெயின் நோய்களுக்கு ஆலோசனை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச எக்கோ சிகிச்சை வழங்கப்படுகிறது.
News August 16, 2025
நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். <
News August 16, 2025
நீலகிரி: டிரோன் கேமரா மூலம் யானைகள் விரட்டியடிப்பு

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.