News April 4, 2025

குடிநீர் கேட்டு மாணவியர் போராட்டம் – சீமான் ஆவேசம்

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களால் தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Similar News

News April 5, 2025

தர்மபுரி மின் நுகர்வோர் மறந்துவிடாதீர்

image

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் இணைப்புகளின் மின் கணக்கீடு சம்பந்தமான குறைபாடுகள், குறைந்த மின் அழுத்தம் புகார்கள் மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பாக புகார் இருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 5 தர்மபுரி கோட்ட அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று செயற்பொறியாளர் தெரிவித்தனர்.

News April 5, 2025

வாடிக்கையாளர் உறவு அதிகாரி வேலைவாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி லீடிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் உறவு அதிகாரி பணிக்கு ஆட்கள் தேர்வு .இந்த வேலைக்கு 20-30 வயதுக்குட்பட்டவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!