News March 24, 2024
குடிநீர் கேட்டு சாலை மறியல்

கரூர், குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டியில் உள்ள 5-ஆவது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோடு பகுதியில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Similar News
News December 29, 2025
கரூர் மாவட்டத்தில் 4 பேர் அதிரடி கைது!

கரூர், பசுபதிபாளையம், க. பரமத்தி, வாங்கல் ஆகிய காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற விக்கி (36), மாரியம்மாள் (67), அன்பழகன் (48), மலர்கொடி (55) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 29, 2025
கரூர்: சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அரசு வேலை ரெடி!

கரூர் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 29, 2025
அரவக்குறிச்சியில் பீகார் வாலிபர் மரணம்!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ்குமார் (23). இவர் கரூர் தாளப்பட்டி பகுதியில் உள்ள பிளைவுட் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வருகின்றார்.நேற்று நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


