News May 1, 2024
குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென ஆட்சியர் சாருஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். முறையற்ற குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் பொதுமக்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Similar News
News November 20, 2024
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
News November 19, 2024
திருவாரூர் மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!
News November 19, 2024
மன்னார்குடி அருகே நூதன மோசடி: ஒருவர் கைது
மன்னார்குடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பெண்களைப் போல் பேசி பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வழியே ரூ.1.60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரை திருவாரூர் சைபர் கிரைம் காவல் துறையினர் பிரசாந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.