News May 22, 2024

குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு

image

கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரும் மே 28ம் தேதி இடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் வரும் 24ம் தேதி முதல் துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்

Similar News

News April 19, 2025

தீராத கடனும் காணாமல் போகும்

image

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்

image

ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது பொன்மகன் சேமிப்புத் திட்டம். இதை குறைந்தபட்சம் ₹100 முதலீட்டில் தபால் நிலையங்களில் தொடங்கலாம். இதில் வருடாந்திர வைப்பு தொகை, குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தற்போது 9.7% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட முதிர்வு காலம் கொண்டது. இதற்கு வருமான வரி சலுகை உண்டு. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!