News August 22, 2024
குடற்புழு நீக்க முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 நபர்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க முகாம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
நாமக்கல் அருகே சோகம் ஓட்டுநர் பலி

நாமக்கல் அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு இவரை காணவில்லை என அவருடைய மகள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் சமையல் அறையில் போதை தலைக்கேறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார் இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 15, 2025
நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்!

கிட்னி விற்பனை வழக்கில் புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் இருவரையும் சிறப்பு புலனாய்வு குழு வினர் கடந்த, 11ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் உள்ள பயணியர் விடுதியில் வைத்து, கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில், கிட்னி புரோக்கர்கள் தெரிவித்த தகவல் படி, அன்னை சத்யா நகரை சேர்ந்த முத்துசாமி, 45, என்ற கிட்னி புரோக்கரை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


