News November 2, 2025
கீழ் பவானி: பெட்ரோல் பங்க் ஊழியர் நீரில் மூழ்கி மாயம்

கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 18 பெட்ரோல் பங்க் ஊழியர் ஆன இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் பவானிசாகர் பூங்காவுக்கு வந்துள்ளனர் பின்னர் தொப்பம்பாளையம் அருகே உள்ள கீழ் பவானி வாய்க்காலில் நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார் அப்போது பூபதி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
ஈரோடு: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

ஈரோடு மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1.<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 3, 2025
ஈரோடு: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

ஈரோடு மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 3, 2025
ஈரோடு: தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விபத்து!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளி அருகே பொள்ளாச்சி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மங்களூரில் இருந்து மாட்டு தீவனபாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அருகில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.


