News April 14, 2024

கீழ்வேளூர்: காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

image

கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியில் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் தலைமையில் தொண்டர்கள் நேற்று வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த ஒரு முறை மட்டும் பாஜகவிற்கு வாக்களித்து பாருங்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்காக வேட்பாளர் குரல் கொடுப்பார். மேலும் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் வாக்காளர்கள் காலிலேயே விழுந்து வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார்.

Similar News

News September 13, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி கந்தகுமார் தலைமையில் இன்று (செப்.13) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நாகை மாவட்ட கோர்ட்டு, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை மற்றும் சீர்காழி தாலுகா கோர்ட்டுகளில் நடைபெறும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படும். இதன்மூலம் கால விரயம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும்.

News September 13, 2025

நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த வாடகையில், 4456 தனியார் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் உழவர் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News September 13, 2025

நாகை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப செப்டம்பர் 15 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!