News September 9, 2025
கீழப்பாவூர் அருகே தீ விபத்து – 2 லட்சம் சேதம்

நாகல்குளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(35), கீழப்பாவூர் அருகே முத்து பர்னிச்சர் ஒர்க் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, ஆலங்குளம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பியது.
Similar News
News September 9, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (09.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 9, 2025
தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டிய விவசாயிகள்

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பி ஏராளமானோர் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனிடையே கருநீர்குளம் பகுதியில் விளைச்சலுக்கு வந்திருந்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்ற வேதனையில் விவசாயிகள் தக்காளியை ரோட்டோரத்தில் கொட்டினர். விளைச்சல் அதிகமாக இருந்தும் போதிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
News September 9, 2025
BREAKING தென்காசிக்கு வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.