News August 18, 2025
கீழத்தூவல் கிராமத்தில் முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழத்தூவல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மாபெரும் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க இருக்கின்றன.
Similar News
News August 18, 2025
ராம்நாடு விவசாயிகளே உங்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் ஆக 22. காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
ராம்நாடு: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

ராம்நாடு இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 18, 2025
ராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து காவல் அதிகாரிகள்

இன்று (18.8.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பகல் ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் – குமார் (83000-15220), பரமக்குடி – சுரேஷ்குமார் (94981-22743), கமுதி – தெய்வீகபாண்டியன் (99944-30783), இராமேஸ்வரம் – சுல்தான் இப்ராகிம் (63793-74601), கீழக்கரை – சண்முகநாதன் (94429-80687), திருவாடானை – சைபுல் ஹிசாம் (96299-40473).