News December 9, 2025
கீழக்கரை விபத்தில் மேலும் ஒருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் கடந்த டிச.06 அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் காயமடைந்த கீழக்கரை அலவாய்கரவாடியை சேர்ந்த மாதேஸ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News December 10, 2025
ராமநாதபுரம்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல்கரை பகுதியில் உள்ள பேராவூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கருவேல மரங்களுக்குள் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீஸார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
ராமநாதபுரம்: சிறுமி கர்ப்பம்., இளைஞர் மீது போக்சோ!

தொண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஆரியமணி (20) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவாடனை போலீஸார் ஆரியமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


