News May 6, 2024
கீழக்கரையில் முதலிடம் பிடித்த மாணவர்கள்
கீழக்கரையில் இன்று +2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி மாணவர் கெளதம் 600க்கு 511 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடமும் ஜன்னத்துல் முஸ்பிரா 509 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் அபிநயா 498 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். அவர்களை பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன் மற்றும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
Similar News
News November 20, 2024
தேசிய குழந்தைகள் கலை நிகழ்ச்சி
டில்லியில் தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை மத்திய கல்வி இயக்குனர் முக்தா அகர்வால் துவக்கி வைத்தார். தமிழக அரசு, மதுரை கலை பண்பாட்டு மையம் ராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் லோக ஆகாஷ் தலைமையில் 4 மாணவர்கள் பங்கேற்றனர். பிரகுல் ரிங்பால் கிஷோர் இரட்டைகம்பு, ஹரி பிரித்திவிராஜ் ஒற்றைக்கம்பு, புகழ்மதி சுருள்வாழ் ஆட்டம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
News November 20, 2024
இராமநாதபுரத்தில் நவ.29இல் பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி நவ.29இல் நடைபெற உள்ளது. மாவட்ட இப்போட்டியில் பங்கேற்று முதல் 3 இடம் பெறுவோருக்கு பரிசு, அரசு பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு ஒருவர், கல்லூரிக்கு இருவர் இப்போட்டியில் பங்கேற்கலாம். 04567-232130 என்ற எண்ணில் என ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
இலங்கை அரசின் முடிவால் மீனவர்கள் அதிர்ச்சி!
இலங்கை அரசின் புதிய முடிவு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்திகொள்ள அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் கடற்படையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இந்த அறிவிப்பால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.