News September 14, 2024
கிழக்கு தாம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது

கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெரு மற்றும் ஆறுமுகம் தெரு அருகே இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில், பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது பனியன் துணிகளால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரிந்தது.
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
செங்கல்பட்டு: பாமக முன்னாள் நிர்வாகி படுகொலை

செங்கல்பட்டு அருகே, இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வாசு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்து வந்த இவர், லாரியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிக்காரணமாக கொலை நடைபெற்றதா என, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
செங்கல்பட்டு: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.