News October 30, 2024

கிளிமாஞ்சாரோவில் ஏறி தமிழர் சாதனை

image

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளர். சென்னை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இவர், தற்போது இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கும் இதுபோல் மலையேற பிடிக்குமா என்று கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News November 20, 2024

BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி

image

சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.

News November 20, 2024

மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு

image

சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!

image

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.