News April 22, 2024

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணி

image

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

மறைமலைநகர்: இது நம்ம ஆட்டம்–2026’ போட்டிகள் தொடக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (ஜன.25) முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம்–2026” தொடங்கியது. இந்த நிகழ்வை ஆட்சியர் சினேகா I.A.S மற்றும் எம்.எல்.ஏ வரலக்ஷ்மி மதுசூதனன் தொடங்கி வைத்தனர். 16–35 வயதுக்குட்பட்ட 600 வீரர்கள் 8 வகை போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றியாளர்கள் மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.

News January 25, 2026

செங்கல்பட்டு: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

image

விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

செங்கை: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!