News October 15, 2025
கிளாம்பாக்கத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அக்.16 முதல் வரும் 19-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2,092 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இ.சி.ஆர் சாலை அல்லது ஓ.எம்.ஆர்., சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு ரயில்கள்!

தீபாவளி விடுமுறையை ஒட்டி வருகின்ற 22-ம் தேதி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 15, 2025
தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்!

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வரும் அக்.16 மற்றும் 18-ந்தேதி இரவு 11.30 மணிக்கு (வண்டி எண்-06133) 14 முன்பதிவு இல்லா பெட்டிகள் மற்றும் 6 முன்பதிவு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கமாக அக்.17-ந்தேதி மாலை 4.35 மணிக்கு (வண்டி எண்-06134) கன்னியாகுமரி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
News October 15, 2025
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கூடுவாஞ்சேரி இடையே வரும் அக்டோபர் 17-ந்தேதி சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இரவு 7:45, 7:58 மற்றும் 8:10 ஆகிய நேரங்களில் ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.