News January 4, 2026
கில் இல்லாததை நம்ப முடியவில்லை: பாண்டிங்

டி20 WC-க்கான இந்திய அணியில் கில் தேர்வு செய்யப்படாததை நம்ப முடியவில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். சமீபத்திய ODI, டி20 போட்டிகளில் கில் சரியாக விளையாடவில்லை என்றாலும், ENG-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பேட்டிங் செய்ததாகவும் பாண்டிங் கூறியுள்ளார். இருப்பினும், கில்லை தேர்வு செய்யாதது, இந்திய அணியில் திறமையான வீரர்கள் அதிகம் இருப்பதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
சீனா கனடாவை தின்றுவிடும்: டிரம்ப்

சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவுக்கு ஆபத்து என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கோல்டன் டோம் கிரீன்லாந்தின் மீது கட்டப்பட்டால் அது கனடாவையும் பாதுகாக்கும். இருப்பினும், கனடா அதற்கு எதிராக உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆவலோடு உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே சீனா அவர்களை தின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
சாய் பல்லவியை பாராட்டிய ஆமிர் கான்

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.
News January 24, 2026
ஜனவரி 24: வரலாற்றில் இன்று

*1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்ததினம். *1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர். *1966 – இந்திய இயற்பியலாளர் ஹோமி பாபா மறைந்த நாள். *1984 – இசையமைப்பாளர் டி.இமான் பிறந்தநாள். *இன்று தேசிய பெண் குழந்தை நாள்.


