News December 21, 2025
கிறிஸ்துமஸ் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

பள்ளிகளில் டிச.24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இதையொட்டியும், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும் அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. டிச.23, 24, 25-ல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு சுமார் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல, www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே! SHARE
Similar News
News December 27, 2025
பார்லிமென்ட்க்குள் இனி இதை கொண்டு வரக்கூடாது!

குளிர்கால கூட்டத்தொடரின் போது, <<18594918>>திரிணமுல் காங்.,<<>> MP சவுகதா ராய், லோக்சபாவுக்குள் இ-சிகரெட் பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமராக்கள் மற்றும் அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, MP-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்து MP-க்களுக்கும் லோக்சபா செயலகம் அனுப்பி உள்ளது.
News December 27, 2025
தளபதி திருவிழாவில் சினிமா நட்சத்திரங்கள் (PHOTOS)

‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் தளபதி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் மலேசியாவில் குவிந்துள்ளனர். SAC, ஷோபா, அட்லி, அனிருத், நெல்சன், லோகேஷ் கனகராஜ், நாசர், பூஜா ஹெக்டே, பிரபு தேவா உள்ளிட்டோர் மலேசியாவை சென்றடைந்துள்ளனர். இன்னும் பல நட்சத்திரங்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரபலங்களின் கிளிக்ஸ் மேலே உங்களுக்காக! SWIPE.
News December 27, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

தங்கம் விலை இன்று(டிச.27) 22 கேரட் 1 கிராம் ₹110 உயர்ந்து ₹13,000-ஐ தொட்டுள்ளது. சவரனுக்கு ₹880 உயர்ந்து ஒரு சவரன் ₹1,04,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை <<18681773>>சர்வதேச சந்தையில்<<>> ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் கடந்த 6 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,800 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


