News December 24, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை சேவை நடைபெறும். பீக் நேரங்களில் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ரயில் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட பீக் அல்லாத நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

சென்னையில் சிலிண்டர் புக் பண்ண ஒரு ‘Hi’ போதும்!

image

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 31, 2025

சென்னை: கார் மோதி பெண் பரிதாப பலி!

image

சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா (55). இவர் நேற்று அதிகாலை குப்பையை கொட்டுவதற்கு வெளியில் வந்த போது, அந்த பகுதியில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முகேஷ்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 31, 2025

சென்னையில் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!