News January 20, 2026

கிருஷ்னகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 24 பொது விநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெறுகிறது. மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யும் சிறப்பு குறைதீர்க்கும் இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கோலா உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் மூதாட்டி திடீர் மரணம்!

image

ஓசூர் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சரோஜா 60. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) வீட்டில் இருந்து வெளியே சென்ற போது திடிரென மூக்கண்டப்பள்ளி சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

கிருஷ்ணகிரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!

News January 27, 2026

கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கில் கொள்ளை!

image

தேன்கனிக்கோட்டை கடைவீதியில் பேன்சி கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் (60). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!