News February 1, 2026
கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முருகானந்தம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் பிரித்திவிராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
BREAKING: கரூர் அருகே பயங்கர விபத்து

கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் தைப்பூச திருவிழாவிற்கு காவடி எடுத்துச் சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தளவாபாளையத்தை சேர்ந்த கவிஸ், பரத் ஆகிய இருவரையும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 1, 2026
அரவக்குறிச்சியில் தட்டி தூக்கிய விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் டி.சிவசாமி, அமமுக ஊராட்சி செயலாளர் பி.சரவணன் மற்றும் பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News February 1, 2026
கரூர்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

கரூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <


