News June 4, 2024
கிருஷ்ணசாமி – ராணிக்கு இடையே கடும் போட்டி

தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராணி 12,125, கிருஷ்ணசாமி 11,924 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் வெறும் 201 மட்டுமே. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பாஜக கூட்டணி வேட்பாளரான ஜான் பாண்டியன் 5,779 வாக்குகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
Similar News
News December 5, 2025
Cinema 360°: ரீ-ரிலீசாகும் ரஜினியின் ‘படையப்பா’

*ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் *ஆதி நடித்துள்ள ‘DRIVE’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது *ரீ-ரிலீசில் அஜித்தின் ‘அட்டகாசம்’ ₹98 லட்சம் வசூல் செய்துள்ளது *அஷ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’ சீரிஸ் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது *கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இசைவெளியீட்டு விழா டிச.6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது
News December 5, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும் *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது * எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்
News December 5, 2025
இந்தியா-ரஷ்யா உறவு.. புடின் திட்டவட்டம்

இந்தியா, ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பானது அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டையும் இலக்காக கொண்டதல்ல என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை IND வாங்குவது போருக்கு நிதி அளிக்கும் செயல் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், US தங்களிடம் தான் அணுசக்தி எரிபொருள் வாங்குவதாக புடின் குறிப்பிட்டார். தானும் PM மோடியும் ரஷ்யா, இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


