News March 29, 2024
கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News November 4, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (03.11.25) காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார் .
News November 3, 2025
தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட உட்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதளங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வளைத்தலங்களில் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும். உறுதி செய்யப்படாத தகவல்கள், வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் போன்றவற்றை தவிர்க்கவும். தென்காசி மாவட்ட காவல் துறை உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது.
News November 3, 2025
நவம்பர் மாத மின் குறைதீர் கூட்ட தேதிகள்

தென்காசி மாவட்டத்தில் நடப்பு நவம்பர் மாதத்தில் 11ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோல் 14ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் 21ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடக்கிறது. அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.


