News February 8, 2026
கிருஷ்ணகிரி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். கிருஷ்ணகிரி மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
கிருஷ்ணகிரி: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி!

ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிப்-09 அன்று அருகே உள்ள எல்லம்மாள் கோவிலுக்கு செல்லும் போது வழியில் விஷப்பாம்பு கடித்தது. பின்னர் அவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிப்-10 சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
கிருஷ்ணகிரி: எலி பேஸ்ட் சாப்பிட்டு குழந்தை பலி!

பர்கூர் அடுத்த சென்னப்பா நகரை சேர்ந்த உதய்குமார், மகன் தன்விக் (2). கடந்த பிரவரி 5-ம் தேதி சிறுவன் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்டை கோல்கேட் என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பிப்-9-ம் தேதி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (10.02.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


