News February 15, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்றைய (பிப்.15) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
Similar News
News February 15, 2026
கிருஷ்ணகிரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா? APPLY NOW!

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News February 15, 2026
கிருஷ்ணகிரி மக்களுக்கு செம்ம சான்ஸ்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூரில் 90 நாட்கள் இலவச அழகுக் கலை (Cosmetology) பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத தகுதியுள்ளவர்கள் இதில்: www.tahdco.com விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
News February 15, 2026
கிருஷ்ணகிரி: பீர் பாட்டிலால் சிறுவனுக்கு சரமாரி அடி!

தோட்டகிரியை சேர்ந்த கார்த்திக் மகன் திருநாதன் (8). இவன் கடந்த 2-ந் தேதி விளையாடி கொண்டிருந்த போது அங்கு வந்த நிதின் (24), நந்தகுமார் (21) ஆகியோர் அவனிடம் மது அருந்த தண்ணீர் பாட்டில், கப் வாங்கி வருமாறு கூறினர். இதற்கு மறுத்த சிறுவனை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ஒசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதில் நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.


