News October 21, 2025

கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

Similar News

News February 11, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9- 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹௌசிங் போர்டு பேஸ் 1 மற்றும் 2, கலெக்டரேட், ஓல்ட்பேட், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி!

image

ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிப்-09 அன்று அருகே உள்ள எல்லம்மாள் கோவிலுக்கு செல்லும் போது வழியில் விஷப்பாம்பு கடித்தது. பின்னர் அவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிப்-10 சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: எலி பேஸ்ட் சாப்பிட்டு குழந்தை பலி!

image

பர்கூர் அடுத்த சென்னப்பா நகரை சேர்ந்த உதய்குமார், மகன் தன்விக் (2). கடந்த பிரவரி 5-ம் தேதி சிறுவன் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்டை கோல்கேட் என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பிப்-9-ம் தேதி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!