News August 5, 2025

கிருஷ்ணகிரி BC&MBC மக்களின் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற கிருஷ்ணகிரி மாவட்ட BC&MBC நல அலுவலரை (04343-235655) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்

Similar News

News August 6, 2025

கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News August 6, 2025

ஒசூா் அருகே குழந்தை உயிரிழப்பு

image

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது இரண்டரை வயது மகன் பைரவன். கடந்த 31-ம் தேதி வீட்டில் குளியல் அறையில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். உடல் முழுவதும் காயம் அடைந்த பைரவனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 6, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட துணை அமைப்பாளர் காலமானார்

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த குட்டப்பள்ளியை சேர்ந்த ஆர். சிவகுமார் இன்று காலை 7 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரது கட்சி பணி மற்றும் சமூக சேவைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர். மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!