News May 13, 2024
கிருஷ்ணகிரி: 75 சவரன் தங்க நகைகள் கொள்ளை

மத்திகிரி அருகே ராயல் ஆர்கேட் குடியிருப்பு பகுதியில் சதீஷ், நாகராஜன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்நிலையில் இருவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டை வந்து பார்க்கும்போது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 75 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
News April 19, 2025
உலக காதலர்களை சேர்க்கும் கிருஷ்ணகிரி ரோஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ரோஜா சாகுபடிக்கு புகழ் பெற்ற மாவட்டமாகும். தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் போன்ற பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கிருந்து ரோஜாக்கள் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின சமயத்தில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தனித்துவம் கருதியே இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க