News October 20, 2025
கிருஷ்ணகிரி: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <
Similar News
News February 12, 2026
கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

தேன்கனிக்கோட்டை அருகே ஆலஅள்ளி கிராமத்தில் பெங்களூருவை சேர்ந்தவருடைய பண்ணையின் மின்வேலி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று (பிப்.11) மதியம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அப்பகுதி கோழிப்பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மன்மதநாயக் (26) என தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 12, 2026
கிருஷ்ணகிரி: 2 வயது குழந்தை துடிதுடித்து பலி!

காரப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (30), மனைவி தெய்வானை செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவர்களது 2-வது மகன் உத்தரன் (2). நேற்று உத்தரனையும் செங்கல் சூளைக்கு அழைத்து சென்ற போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளான். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News February 12, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


