News January 18, 2026

கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

தளி அடுத்த சரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பல்லவி (14), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர் வயிற்றுவலி, தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஜன-17 வீட்டில் தனியாக இருந்த பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கிருஷ்ணகிரியில் 7 வயது சிறுமி பரிதாப பலி!

image

கெலமங்கலத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருடைய 7 வயது மகள் பிரநிதி. அப்பகுதியில் 2 வகுப்பு படித்து வந்த சிறுமி உடல் நலக்குறைவால் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை (பிப்.1) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News February 2, 2026

கிருஷ்ணகிரி: பாட்டியை அடித்து கொன்ற கொடூர பேரன்!

image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (57). இவா் தனது மகன்வழி பேரன் சிரஞ்சீவிக்கு (25) தனது பெயரில் புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில் நேற்று சிரஞ்சீவி வண்டிக்கான கடனை கட்டுவதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சிரஞ்சீவி ராணியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

error: Content is protected !!