News December 17, 2025
கிருஷ்ணகிரி: வேன் மோதி துடிதுடித்து பலி!

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தாவரக்கரை கிராமத்தில் நேற்று(டிச.16) இரவு காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. இதை அறிந்த அருகே இருந்த பொதுமக்கள் யானையை பார்ப்பதற்காக அப்பகுதியில் அதிகளவில் வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வேன் மோதி யானையை பார்க்க வந்த தாவரக்கரையைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.
Similar News
News December 20, 2025
கிருஷ்ணகிரி: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (டிச- 20) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎல்ஏ, பரந்தப்பள்ளி, கல்லாவி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ராஜாஜி நகர், ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டினாயனஹள்ளி, கே.ஆர்.பி அணை, ஆலப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
News December 20, 2025
கிருஷ்ணகிரி: மன வேதனையில் இளம்பெண் தற்கொலை!

கிருஷ்ணகிரி பழையம்பேட்டை பகுதியில் பாருக்கு மற்றும் அவரின் மனைவி முபீன்தாஜ் இருவரும் திருமணம் செய்து 2 வருடமாகிறது. இதில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனையால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த பெண் தன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
கிருஷ்ணகிரி: கார் மோதி தொழிலாளி துடி துடித்து பலி!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது சபேலாம் (வயது 36). இவர், பாகலூர் அருகே கக்கனூர் பகுதியில் தங்கி கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். அவர் கக்கனூர்- பாகலூர் சாலையில் மொபட்டில் சென்று சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது சபேலாம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


