News January 3, 2026

கிருஷ்ணகிரி: வீடு தேடி வரும் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாளை ஜனவரி 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நேரடி விநியோகம் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக அமையும். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 5, 2026

கிருஷ்ணகிரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மத்திகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜன.6ஆம் தேதியும் தண்டரை, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஜன.8 ஆம் தேதியும் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்தடை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருக்கும். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

கிருஷ்ணகிரியில் மீன்பாசி குத்தகைக்கு இ-டெண்டர் அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

News January 5, 2026

கிருஷ்ணகிரி: நள்ளிரவில் கோர விபத்து; சோகத்தின் உச்சம்

image

சூளகிரி ஒன்றியம் பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(24). என்பவர் அவருடைய சித்தி சந்திரம்மாவை(50) நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வரும்பொழுது பெத்தசிகரலப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் டிராக்டர் மீது பைக் மோதிசம்பவ இடத்தில் முனிராஜ்(24) என்பவர் உயிரிழந்தார். சந்திரம்மா படுகாயத்துடன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!