News December 31, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், 2025-26ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவ நெல், ராகி, உளுந்து, பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து தலைமையில் ஏக்கர் நெல்லுக்கு ரூ.474.90, ராகிக்கு ரூ.174, உளுந்திற்கு ரூ.255 தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை கொள்ளவும்.
Similar News
News January 1, 2026
பரிதா நவாப்புக்கு அதிமுக-வில் புதிய பொறுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்புக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கழக மகளிர் அணி துணை செயலாளராக அவரை எடப்பாடி பழனிசாமி நியமித்து அறிவித்துள்ளார். சமிபகாலத்திற்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக சென்ற பரிதா நவாப்புக்கு அதிமுக தலைமைக் கழகம் பொறுப்பு வழங்கியுள்ளது.
News January 1, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஏற்றம் தரும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
News January 1, 2026
கிருஷ்ணகிரி மக்களுக்கு, காவல்துறை புத்தாண்டு வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.


