News January 7, 2026
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

கிருஷ்ணகிரி: பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன்(64). இவர், அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், காபலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் அடித்தே கொலை!

கோனேகானப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனிமாரப்பா (41). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவுக்கும் இடையே வழிபாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணப்பா கடந்த 21-ந் தேதி முனிமாரப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனிகிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
News January 26, 2026
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி காவலர்கள் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 25.1.26 இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு அவசர உதவிக்கு அலைபேசி எண்கள் மற்றும் காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏதாவது பொதுமக்களுக்கு உதவி ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க